Saturday, January 7, 2017

"குண்டலினியோகம்" (Simplified Kundalini Yoga - SKY) : ------------------------------------------------------------- . "மாலையிலே ஒருவருக்கு பலவிதமான மன இறுக்கம் (Tension) உண்டாகின்றன. போய் படுத்துக் கொள்கிறார். தூங்கி விடுகிறார். காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய மாற்றம். முதல் நாள் மாலை இருந்த அளவுக்கு மன இருக்கமோ, கவலையோ இல்லை. மறுபடியும் வரும்; நேரம் போகப் போக வரும்; ஆனால் இப்போது இல்லை. காரணம் என்னவென்றால், ஒரு பகுதி மன இயக்கம் இன்று, சக்தி சேமிக்கப்பட்டது. அந்தச் சேமிக்கப்பட்ட சக்தியினால் ஓரளவு அமைதி, உடல் நலம் இவைகளெல்லாம் கிடைக்கிறது. அதே போன்று யோகத்தின் வாயிலாக, மனவளக்கலையின் வாயிலாக "குண்டலினி யோகம்" வாயிலாக, சிறுகச் சிறுக நமது ஆற்றலை, சேமிப்புத் தன்மையை அதிகரிக்கிறோம். ஏனென்றால் உடல், உயிர், மனம் இந்த மூன்றின் இயக்கம் ஒன்றையொன்று தள்ளியே இருக்கிறது. . மனம் விரைவாக இயங்குமேயானால், உயிர்ச் சக்தியின் தன்மாற்றம் அதிகமாகிறது. அதனால் உயிர்ச்சக்திக்கு அதிர்வலை அதிகமாகிறது (Vibration of life force is increasing). அதே நேரத்தில் உடலில் உள்ள எல்லா செல்களும் தூண்டப் பெற்று, செல்களெல்லாம் இயக்கத்தில் வேகம் பெறுகின்றன. இப்படி ஒன்றால் ஒன்று உடலில் துன்பம் ஏற்பட்டால், அதனால் உயிர்ச்சக்தி அதிர்வலை அதிகமாகும். மனமும் துன்பப்படும். அதேபோல, மனம் அமைதி பெற்றதேயானால் உயிர்ச்சக்தி அமைதி பெறுகிறது. உடல் சக்தியும் அமைதி பெறுகிறது. இப்படி ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதனால், உயிரும் உடலும் சரியாக அமைய வேண்டுமானால், மனதைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதைப் பற்றிய உண்மைகளையெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நல்ல பயிற்சியின் மூலமாக மனதை எப்போதும் அமைதி காக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பேற்றை பெறுவதற்கு "குண்டலினி யோகப்" பயிற்சி மிக மிக உதவியாக இருக்கும். இந்த யோகப் பயிற்சியைப் பெறுவதற்கு முற்காலத்தில் மிக மிக கால தாமதமாகும். இப்பொழுது எளிமைப்படுத்தி வழங்கி வருகிறோம். . இப்போது குண்டலினியோகம் கற்றுக் கொள்பவர்களுக்கு ஒரே நிமிடத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்து ஆதாரங்களையும் கடந்து, ஜீவ ஸ்தானத்திற்கு வந்து விடுகிறோம். அதாவது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி இந்த ஐந்து ஸ்தானங்களையும் கடந்து, ஆக்கினைக்குக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறோம். சரியாக வெற்றி பெறுவதற்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும். அந்த ஏழு நாட்களுக்கு உடல் உறவு இல்லாமல் இருந்தால் போதும். அதன் பிறகு அதன் ஆற்றல் மீறிவிடுகிறது. முதலில் உயிரை உணர்ந்தால் தான் உயிருக்கு மூலமான பிரம்மத்தை உணர முடியும். உயிர் உணர்வு பெறாமல் பிரம்மத்தை உணர்வது வேதாந்தம். உயிர் உணர்வு பெற்று அதற்கு பின் பிரம்மத்தை அறிவது சித்தாந்தம்." . - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன். ************************************* அகத்தவப் பயன்கள் : "அறிவதனைக் கருவினிலே இணைத்து தவம் ஆற்ற ஐம்புலன்கள் அமைதி பெறும் அறுகுணமும் சீராம், அறிவுதன் விழிப்புநிலை பிறழாத தெளிவில் ஐந்து பெரும் பழிச் செயல்கள் விளைய வழியேது? அறிவு உயிரில் அடங்கி அந்நிலையில் மேலும் ஆழ்ந்து ஒடுங்கி துரியம் நிற்க முன்வினைகள் போமே அறிவு துரியாதீத நிலை நிற்க நிற்க ஆதியாம் மெய்ப்பொருளாம், அறும் பிறவித் தொடரே." . தெய்வநிலை : "எங்கும் நிறைவாக இருக்கிறார் கடவுளென்பீர்! இங்கு நம் உடல் உள்ளத் துரைந்தும் இருப்பாரன்றோ? அங்கங்கே போய்த் தேடி அலைவானேன் அவர்க்காக? தங்க நம் உயிர்க்குயிராம் தவநிலையில் அவரே நாம்." . - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

"குண்டலினியோகம்" (Simplified Kundalini Yoga - SKY) :
-------------------------------------------------------------
.

"மாலையிலே ஒருவருக்கு பலவிதமான மன இறுக்கம் (Tension) உண்டாகின்றன.  போய் படுத்துக் கொள்கிறார்.  தூங்கி விடுகிறார்.  காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய மாற்றம்.  முதல் நாள் மாலை இருந்த அளவுக்கு மன இருக்கமோ, கவலையோ இல்லை.  மறுபடியும் வரும்;  நேரம் போகப் போக வரும்;  ஆனால் இப்போது இல்லை.  காரணம் என்னவென்றால், ஒரு பகுதி மன இயக்கம் இன்று, சக்தி சேமிக்கப்பட்டது.  அந்தச் சேமிக்கப்பட்ட சக்தியினால் ஓரளவு அமைதி, உடல் நலம் இவைகளெல்லாம் கிடைக்கிறது.  அதே போன்று யோகத்தின் வாயிலாக, மனவளக்கலையின் வாயிலாக "குண்டலினி யோகம்" வாயிலாக,  சிறுகச் சிறுக நமது ஆற்றலை, சேமிப்புத் தன்மையை அதிகரிக்கிறோம்.  ஏனென்றால் உடல், உயிர், மனம் இந்த மூன்றின் இயக்கம் ஒன்றையொன்று தள்ளியே இருக்கிறது. 
.

மனம் விரைவாக இயங்குமேயானால், உயிர்ச் சக்தியின் தன்மாற்றம் அதிகமாகிறது. அதனால் உயிர்ச்சக்திக்கு அதிர்வலை அதிகமாகிறது (Vibration of life force is increasing).  அதே நேரத்தில் உடலில் உள்ள எல்லா செல்களும் தூண்டப் பெற்று, செல்களெல்லாம்  இயக்கத்தில் வேகம் பெறுகின்றன.  இப்படி ஒன்றால் ஒன்று உடலில் துன்பம் ஏற்பட்டால், அதனால் உயிர்ச்சக்தி அதிர்வலை அதிகமாகும்.  மனமும் துன்பப்படும்.  அதேபோல, மனம் அமைதி பெற்றதேயானால் உயிர்ச்சக்தி அமைதி பெறுகிறது.  உடல் சக்தியும் அமைதி பெறுகிறது.  இப்படி ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதனால், உயிரும் உடலும் சரியாக அமைய வேண்டுமானால், மனதைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  மனதைப் பற்றிய உண்மைகளையெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  நல்ல பயிற்சியின் மூலமாக மனதை எப்போதும் அமைதி காக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்தப் பேற்றை பெறுவதற்கு "குண்டலினி யோகப்" பயிற்சி மிக மிக உதவியாக இருக்கும்.  இந்த யோகப் பயிற்சியைப் பெறுவதற்கு முற்காலத்தில் மிக மிக கால தாமதமாகும்.  இப்பொழுது எளிமைப்படுத்தி வழங்கி வருகிறோம்.
.

இப்போது குண்டலினியோகம் கற்றுக் கொள்பவர்களுக்கு ஒரே நிமிடத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்து ஆதாரங்களையும் கடந்து, ஜீவ ஸ்தானத்திற்கு வந்து விடுகிறோம்.  அதாவது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி இந்த ஐந்து  ஸ்தானங்களையும் கடந்து, ஆக்கினைக்குக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறோம்.  சரியாக வெற்றி பெறுவதற்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும்.  அந்த ஏழு நாட்களுக்கு உடல் உறவு இல்லாமல் இருந்தால் போதும்.   அதன் பிறகு அதன் ஆற்றல் மீறிவிடுகிறது.  முதலில் உயிரை உணர்ந்தால் தான் உயிருக்கு மூலமான பிரம்மத்தை உணர முடியும்.  உயிர் உணர்வு பெறாமல் பிரம்மத்தை உணர்வது வேதாந்தம்.  உயிர் உணர்வு பெற்று அதற்கு பின் பிரம்மத்தை அறிவது சித்தாந்தம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

*************************************

அகத்தவப் பயன்கள் :

"அறிவதனைக் கருவினிலே இணைத்து தவம் ஆற்ற
ஐம்புலன்கள் அமைதி பெறும் அறுகுணமும் சீராம்,
அறிவுதன் விழிப்புநிலை பிறழாத தெளிவில்
ஐந்து பெரும் பழிச் செயல்கள் விளைய வழியேது?
அறிவு உயிரில் அடங்கி அந்நிலையில் மேலும்
ஆழ்ந்து ஒடுங்கி துரியம் நிற்க முன்வினைகள் போமே
அறிவு துரியாதீத நிலை நிற்க நிற்க
ஆதியாம் மெய்ப்பொருளாம், அறும் பிறவித் தொடரே."

.
தெய்வநிலை :

"எங்கும் நிறைவாக இருக்கிறார் கடவுளென்பீர்!
இங்கு நம் உடல் உள்ளத் துரைந்தும் இருப்பாரன்றோ?
அங்கங்கே போய்த் தேடி அலைவானேன் அவர்க்காக?
தங்க நம் உயிர்க்குயிராம் தவநிலையில் அவரே நாம்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment