வெற்றிபெற வழி - வேதாத்திரி மகரிஷி
தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலும் பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும். கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும். இது தான் வேதங்கள், புராணங்கள் சொல்லும் சாரம் (Essence) ஆகும். ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பிறருக்குத் துன்பம் வந்து விடுகிறது. அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. அப்போது இயன்ற வரையில் நாம் அப்படிப்பட்டவர்களின் துன்பத்தைத் தீர்க்கிற போதும், அதனால் நமக்குத் துன்பம் வந்து, விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நமக்கே துன்பம் வந்து, நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும்படிக் கெஞ்சும் நிலை வந்துவிடக் கூடாது அல்லவா? அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில், நமக்கு என்னென்ன தேவையோ, அப்ப்டிப்பட்ட சூழ்நிலை தானாகவே அமையும். இதற்காக்க் கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெறவேண்டியதே இல்லை. எந்த இடத்திலே, எந்தக் காலத்திலே, எந்த நோக்கத்தோடு, எந்தச் செயலை நீ எவ்வளவு திறமையாக்ச் செய்கிறாயோ அதற்குத் தகுந்தவாறே உனக்கு விளைவும் வரும். வெற்றியும் வரும்.
No comments:
Post a Comment