வேதாத்திரியம் :
===============
போரில்லா நல்லுலகம் :
-----------------------------------
உலகமென்ற மண்மீது அனைவரும் பிறந்தோம்,
உயிர்காக்கும் காற்று ஒன்றே மூச்சு விடுவதற்கு
உலகெங்கும் ஒளி வீசும் சூரியனும் ஒன்றே
உள்ள கடல் ஒன்றே நீர் ஆவியாகிப் பொழிய
உலகில் இன்று உள்ளோர் இதிலொன்றும் செய்ததில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்து செத்துப் போவார்.
உலகில் ஒரு குழுவினர் மற்றவரைக் கொன்று
உயிர் வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.
-வேதாத்திரி மகரிஷி
உலகில் பிறந்த நாம் யாரும் நாம் சுவாசிக்கும் காற்றையோ,
உலகிற்கு ஒளிகொடுக்கும் சூரியனையோ, நம் வாழ்க்கைக்கு
அவசியமான நீரையோ, இந்த நிலத்தையோ செய்யவில்லை.
ஆனால் அதற்கு உரிமையை மட்டும் அனைவரும் பெற முயற்சியை
மேற்கொள்கிறோம். இதன் விளைவே உலகில் போர் உருவாகிறது.
போரினால் ஏற்படும் துன்பங்களை ஒரு நிமிடம் உலக மக்கள்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது.
பொருள் இழப்பு, உயிர் இழப்பு, உறுப்புகள் இழப்பு, குடும்ப உறுப்பினர்
இழப்பு...இப்படி என்னும் எவ்வளவோ. இவைகளில் எதையும் நம்மால்
ஈடு செய்யமுடியுமா. யோசிக்கவேண்டும். உலக அறிஞர் பெருமக்கள்
ஒன்றுகூடி ஒரு திட்டம் தயாரிக்கவேண்டும். இந்தப் போரை எப்படி
தவிர்ப்பது என்று ஆராய வேண்டும். ஏற்கனவே நம்மிடம் இருக்கின்ற
ஐக்கிய நாடுகள் சபையைக் கூட்டி, அச்சபையில் உள்ள பாதகாப்புச்
சபையின் பொறுப்பில் எல்லா நாடுகளின் எல்லைப் பாதுகாப்பையும்
கவனிக்கும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பையும் அளிக்க
வேண்டும். எல்லா நாடுகளும் அதன் அதிகாரத்திற்கு ஒத்துழைப்பு
நல்கவேண்டும். போரைத் தவிர்க்க முடியும். போருக்காகும் செலவுகளை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டும்.
உலகம் அமைதி பெரும். வறுமை நீங்கும். ஒற்றுமை உருவாகும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! :

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment