🌹புத்தாண்டு அல்லது புதுப்பித்தல் நாள் 🌹
இன்று காளை எழுந்த உடன் எனது mobile எடுத்து watsapp open பண்ணி பார்த்த பொழுது ஒரு 50 நபர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர் அதை பார்த்து விட்டு அதை பற்றிய சிந்தனையில் rest room சென்றேன்
Room கு வெளியே பறவைகளின் மகிழ்ச்சிகரமான சப்தமும் காற்றின் மூலம் மரங்களின் அசைவையும் பார்த்தேன் அது எப்பொழுதும் அதன் இயல்பில் தினம் தினம் தன்னை புதுப்பித்துக் கொண்டு உற்சாகமாக தனது வாழ்வை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தாலும் இன்று அதன் ஆழம் உணர முடிந்தது
மனிதனை தவிர்த்து மற்ற எந்த உயிருக்கும் தெரியாது இன்று புத்தாண்டு என்று ஏனெனில் இந்த புத்தாண்டை உருவாக்கியது மனிதன் தானே
மற்ற எல்லா உயிர்களும் தனக்குள் இருக்கும் இயற்கையோடு இணைந்த நிலையில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிகரமாக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறது அது இயற்கையை மறவாது அதனுடன் இணைந்து வாழ்கின்றது
இயற்கை மறந்து வாழும் நமக்கு நினைவு படுத்த நம்மை புதுப்பிக்க இது போன்ற புத்தாண்டு (புதுப்பித்தல் தினம்) தனியாக தேவைப்படுகிறது
உண்மையில் இன்று மட்டும் நம்மை புதுப்பிக்க வேண்டுமா இல்லை- தினம் தினம் நம்மை புதுப்பித்துக் கொண்டிருக்கும் இயற்கையை உணர்ந்து இணைய வேண்டுமா- என்ற ஆழமான கேள்வி எழுப்பினால் இன்னும் நாம் ஆழமாக செல்லலாம்
இந்த இடத்தில் மகரிஷி அவர்கள் சொல்லிய உணர்வு பூர்வமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்
🌹இறைநிலையோடு எண்ணத்தை கலக்க விட்டு ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க என்ற வார்த்தைகளை சற்று ஆழமாக பார்க்க வேண்டிய ஒன்று 🌹
நம்முள் இருக்கும் அந்த உணர்வையும் நமக்கு வெளியே உள்ள பிரபஞ்சத்தின் உணர்வையும் இணைத்து புதுப்பித்துக் கொண்டிருக்கிற ஒன்றில் விழிப்பாய் நின்று பழகினாள் போதுமே நிலையான மகிழ்ச்சி இயல்பில் உள்ளதே - மற்ற உயிரினங்கள் அந்த இயல்பில் வாழ்கின்றது
ஏன் இந்த மகிழ்ச்சி நமக்குள் மறைக்கபடுகின்றது - நாம் உருவாக்கி வைத்துள்ள என்னில் அடங்கா தேவைகள் தானே - இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் ஆசைகளின் சேர்க்கை என்று சொல்லலாமே
சந்திரன் சூரியன் இது போன்றவைகளுக்கு எந்த வித தேவையும் இன்றி சுழல்கிறது - மரம் தண்ணீர் தேவையை தவிர வேறு எதையும் வைத்துக் கொள்வதில்லை - மற்ற உயிரினங்கள் பசி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் எந்த வித தேவைகளை வைத்துக் கொள்வதில்லை. அதனால் அவைகள் இயற்கையாகவே வாழ்கின்றது
ஆனால் நீ உன் அடிப்படை தேவைகளை பற்றிய தெளிவு பெறாத வரை தேவைகளின் பின்னால் மட்டுமே ஓடி வாழ்வை இழக்கும் தன்மை உருவாகி கொண்டே இருக்கும்.
மறைப்பு = தேவைகள்
தேவைகள் = ஆசைகளின் சேகரிப்பு
இங்கு சேகரித்து வைத்துள்ள தேவைகளை சுமப்பதே தன்னில் உள்ள உண்மையான மகிழ்ச்சியை மறைக்கின்றது
இதை புரிந்து கொண்டால் எந்த ஒரு நிலையான மகிழ்ச்சி உள்ளதோ அதற்கு முக்கியதுவம் கொடுக்க தோன்றும் அப்படி ஒரு முக்கியத்துவத்தை அன்றாட வாழ்வில் நடைமுறை படுத்தி வரும் பொழுது மற்ற தேவைகளை குறைத்து கொண்டே வர தோன்றும்
இப்படி ஒரு புரிதல் மூலம் தேவைகள் குறைக்க குறைக்க மறைப்பு விலகி இயல்பில் உள்ள மகிழ்ச்சியில் இயல்பாக பயணிக்க தோன்றும்
இந்த பயணம் என்பது வருடம் ஒரு முறையோ- அல்லது மாதம் ஒரு முறை வரும் விழாக்கள் மூலமோ- விசேஷங்களில் மூலம் வருவதோ இன்றி தினம் தினம் இன்னும் சொல்ல போனால் நம்மை மறவாத நொடி பொழுது ஒவ்வொன்றிலும் நம்மை நாம் புதிப்பிக்கப் பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள முடியும்
நம்மில் உள்ள தேவைகளை மறக்கும் பொழுது நாமும் உயிர்ப்புள்ள ஒன்றில் மகிழ்வுடன் வாழ முடியும்
இந்த அடிப்படையை உணர்வதற்கு தியானம் உதவுகிறது - நமக்குள் இருக்கும் மறைப்பை விளக்கி தினம் தினம் புதுமையில் மலர்வோம்.
உன் வாழ்வுக்கு உன்னை தவிர வேறு யாராலும் உயிர்ப்போ அல்லது புதுப்பிப்போ தர முடியாது.
புதுப்பிக்க காரணமாக இருக்கும் இந்நாள் மூலம் மேலே உள்ள விஷயத்தை சமர்ப்பிக்கின்றேன். பொருந்தினால் எடுத்துக் கொள்ளலாம்.
எல்லோருக்கும் எனது 🌹புதுப்பித்தல் நாள் வாழ்த்துக்கள் 🌹
❤பகிர்வு❤
No comments:
Post a Comment