வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்!குருவே துணை.குழு அன்பர்களுக்கு அன்பான வணக்கங்களும்,வாழ்த்தூக்களும்..நம் குரு அருட்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி தத்துவஞானியாக,விஞ்ஞானியாக,இலக்கியவாதியாக,சமுதாயம் உய்ய பல சீர்திருத்த சிந்தனைகளை அளித்த சீர்திருத்தவாதியாக,உலக அமைதிக்காக தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்த உலக நலத் தொண்டனாக,அத்தனைக்கும் மேலாக சிறந்த மனிதானக வாழ்ந்து தன் வாழ்க்கை அனுபவங்களை தான் உணரந்த விஷயங்களை மனிதகுலம் உய்ய இந்த உலகத்திற்கு அளித்த அற்புதமான மகான்.இவருடைய பயிற்சி முறைகளும் தத்துவவிளக்கங்களும் உலகில் உள்ள அனைத்து மக்களாலும் ஏற்றூக்கொள்ளப்பட்டு அனைத்து மக்களிடைய வேதாத்திரியம் பரவி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே..இந்த பயிற்சி முறைகள் நமது ஆயக்காரன்புலத்தில் கடந்த *2002*ஆம்ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு நமது ஆயக்காரன் புலம் தவமையம் *ஆயக்காரன்புலம் மனவக்கலை அறக்கட்டளை* யாக பதிவு செய்யபட்டுள்ளது என்பதை மகிழ்வுடன்"தெரிவித்து கொள்கிறோம்...இதற்காக தம்முடைய குடும்ப மற்றும்"அலுவலக பணிகளுக்கிடையே ஒன்றினால் ஒன்று கெடாதவாறு உழைத்து"இதனை"நமக்கெல்லாம் ஏற்படுத்திகொடுத்த ஆசிரியர்கள் அறங்காவலர் மன்ற"அன்பர்கள் அனைவர்களுக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் குழுவின் சார்பாக தெரிவித்துகொள்கிறோம்..இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாக ஆயக்காரன்புலம் தவமையம் தொடர்ந்து செயல்பட உள்ளது ஆயக்காரன் புலம் *ஆண்கள் தவமையம்* தொடந்து சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அதே இடத்திலும் *மகளிர் தவமையம* வள்ளுவர் சாலையின்"வடக்கே உயர்திரு பசுபதி"ஐயா இல்லத்தில் *ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு*நடைபெறும் என்பதினையும் மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம் இருபால் அன்பர்களும் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட நாட்களில் கலந்துகொண்டு உடல் நலம்.மனவளம்.நட்புநலம்,சமுதாய நலம் காத்து தானும் உயர்ந்து பிறரையும் வாழவைத்து வாழ்வாங்கு வாழவேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம் வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்!!குருவே துணை.🌹மன்ற அன்பர்கள்"இந்த தகவல்களை தன்னுடைய நண்பர்கள் உறவினர்களுக்கு தெரியபடடுத்தி(share seithu) பயிற்சிகளில்"கலந்துகொள்ள செய்ய"ஊக்கபடுத்துமாறு அன்புடன்"கேட்டுகொள்கிறோம்.🙏வளர்க"வேதாத்திரியம்🌹வாழ்க வளமுடன்🌹
No comments:
Post a Comment