குடும்பம்
நட்பிலே கணவன் மனைவி உறவு மிகப் பெருமையுடையது. உடல், பொருள், ஆற்றல், என்ற மூன்றையும் ஒருவருக் கொருவர் மனம் உவந்து அர்ப்பணித்து வாழ்கைத் துணைவராகி இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழும் பெருமை கணவன் - மனைவி உறவில்தான்.
பொருள் ஈட்டுதலில் இருவரில் ஒருவரோ அல்லது ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வான திறமையும் பொறுப்பும் உடையவராகவோ இருக்கலாம். ஆயினும் காப்பது, நுகர்வது, பிறர்கிடுவது ஆகிய செயல்களில் இருவரும் சமமான பொறுப்பை ஏற்க வேண்டும்.
வாழ்க்கையிலேயே மேம்பாடாக, நற்றுணையாக மதிக்க வேண்டியது கணவனை மனைவியும் மனைவியைக் கணவனுமே. கணவன் மனைவி நட்பில் வலிவு பெறாதவர்கள் வாழ்வு குறையுடையதாகவே கருத வேண்டும். எனவே ஒவ்வொருவரும் கணவன் - மனைவி உறவை உயிருக்கும் மேலானதாக மதித்து போற்ற வேண்டும். எக்காரணத்திலேனும் இந்த நட்பு முறிந்தால் ஓராண்டு காலம் பொறுத்திருந்து இனி மீலாது என்ற முடிவு ஏற்பட்டு விட்டால்தான் திருமண ரத்துக்கும் மருமணத்திற்கும் முயற்சி மேற்கொள்ளலாம். வேறுபட்ட உள்ளங்கள் காலத்தால் ஒன்றுபட இடமுண்டு. உணர்ச்சி வயப்பட்டு விவாகரத்து ஏற்படாதவாறு சமுதாயத்திலுள்ள அறிஞர்கள் தக்க பாதுகாப்பும் அறிவுரைகளும் வழங்க வேண்டும். தகுந்த காரணமின்றி எளிதாகத் திருமண ரத்துக்கு இடமளிக்காத சமுதாயமே ஆன்மிக வலுவிலும், ஒழுக்க உயர்விலும் பெருமைப்படத் தக்கதாக இருக்கும்.
- வேதாத்திரி மகரிஷி
The husband-wife relationship is divine; no other can equal it in its depth and intensity, because only in this relationship the union of souls occur - Vethathiri Maharishi
No comments:
Post a Comment