வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.
உலக பொது அருள்நெறி சமய ஆண்டு : 31
ஜனவரி : 30
இன்றைய சிந்தனை :
நமது சகோதரர்கள்:
"பெரும்பாலான நாடுகளில் சட்டங்களாலேயே குற்றங்கள் தோன்றுகின்றன. பெருகுகின்றன. அக்குற்றங்களைக் குறைக்க மேலும் சட்டங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. சட்டங்களே மனிதர் வாழ்வைப் பாழாக்கும் மாயக் கருவிகளாக இருக்கின்றன. சமுதாயமே தனி மனிதர் குற்றங்களைச் செய்யக் காரணமாகின்றது. எந்தச் சமுதாயம் தனி மனிதன் குற்றத்திற்குக் காரணமோ அதுவே தனி மனிதனை தண்டித்துக் கொண்டே இருக்கின்றனது. நீதி எங்கே? சட்டம் எங்கே? குற்றம் எங்கே? தண்டனை எங்கே?
இந்த அலங்கோலத்திற்கு காரணம் என்ன? ஜனநாயகம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் என்ற முத்திரையில் சுயநலமிகள் குழுவினர் குழுவினராக இணைந்து ஆட்சியை மாறிமாறிக் கைப்பற்றி மக்களை காயாடும் ஒரு சூதாட்டம் அன்றோ?
உத்தமர்கள் நிர்வாகத்தில் ஆட்சி நிலைபெற முடியாமலும், உத்தமர்கள் ஆட்சியிலே பங்கெடுத்துக் கொள்ள முடியாமலும் சுயநலமிகள் புரியும் தந்திரங்கள் எவ்வளவு ! இந்த நிலைமையில் இத்தகைய அரசியல்வாதிகளை அவர்கள் கொண்டுள்ள ஆட்சிபோதை என்ற மயக்கத்திலிருந்து மக்கள்தானே விடுவிக்க வேண்டும்?! ஆட்சி போதை என்ற வெள்ளம் அவர்களைத் தாண்டி அடித்துச் செல்லுகின்றது. வாருங்கள் சகோதரர்களே!.. ஓட்டுரிமை என்ற கருவியைச் சரியாகப் பயன்படுத்தி வெள்ளம் புறப்படும் இடமாகிய மதகை அடைத்து ஆட்சி போதை கொண்ட அரசியல்வாதிகளையும் அவர்களைத் தொடர்ந்து ஆபத்தில் சிக்கித் தவிக்கும் மக்களையும் நாமே தான் மீட்க வேண்டும்; ஏனெனில் அவர்கள் அனைவரும் மனித இனம்; நமது சகோதரர்கள்."
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
No comments:
Post a Comment