வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.
உலக பொது அருள்நெறி சமய ஆண்டு : 31
ஜனவரி : 14
இன்றைய சிந்தனை :
பேரின்ப வெள்ளம் :
வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.
உலக பொது அருள்நெறி சமய ஆண்டு : 31
ஜனவரி : 14
இன்றைய சிந்தனை :
பேரின்ப வெள்ளம் :
"அன்பும் கருணையும் உடைய தெய்வ நிலையானது விண் முதல் ஆறறிவாகி, மனித மனத்தின் மூலம் தனது பரிணாமப் பயணச் சரித்திரத்தை உள்ளுணர்வாகக் காட்டிய பேரறிவிற்கு நன்றி கூறுமிடத்து, அத்தகு உள்ளுணர்வு அடைந்த நம்மையே இறைநிலைக்கு அர்ப்பணம் செய்து மகிழ்ச்சியடைவோம்.
மேலும் உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்தப் பேராதார இறைநிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.
எல்லா உயிர் வகைகட்கும் உணவாகவும் மற்றும் வாழ்க்கை வசதிகளாகவும், சிக்கலில்லாமலும், வரையறை இன்றியும், தங்களது வளர்ச்சியை அர்ப்பணித்து உலகைக் காத்து வருகின்றன தாவார இனங்கள். அத்தகு தாவர வர்க்கங்களை அன்போடும் கருணையோடும் உருவாக்கி, இதர உயிரினங்களுக்கு அளித்துள்ள பேரன்புக்காகவும், கருணைக்காகவும் இறைநிலைக்கு நன்றி கூறி, அப்பெருமகிழ்ச்சியான பேரின்ப வெள்ளத்தில் திளைப்போம்.
ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கருதி என்றும் கொண்டாடுவோம்."
சூட்சுமப் பொங்கல் :
"வெட்ட வெளி என்ற பெரும் பானைக்குள்ளே
வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி,
அட்டதிக்கும் அறிவாலே துழாவி விட்டேன்,
ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன இன்பம்,
கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல்
கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால்
தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது
சுவைக்கச் சுவைக்க இன்பமிகும் சூட்சுமப் பொங்கல்."
"பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து புலனடக்க வாழ்வு பெற்றுப் பொங்கிடுவோம் நாடனைத்தும்
பொறுப்பாட்சி வளம் கண்டு; பொங்கிடுவோம் சமுதாயப் பொருள் துறையில் நிறைவு கண்டு,
பொங்கிடுவோம் மக்கள் குலம் போர் ஒழித்து அமைதி பெற.""பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க. பங்கீடு பெற்றவர்கள் பயனால் பொங்க, உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க, உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்."
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:
Post a Comment