நாம் செய்த
வினைகளின்
விளைவை
அனுபவித்தே
ஆக வேண்டும்,,,
மகரிஷியின் வைர வரிகள் :
அவரவர் விருப்பம் போல செயல் புரியலாம்" என்ற எண்ணம் இந்த சமுதாயத்தில் பலரிடம் உள்ளது. இது மிகத் தவறாகும்."
இறையாற்றல்' எல்லா இடங்களிலும், எல்லாப் பொருட்களிலும் எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளது.
ஒவ்வொருவருக்குள்ளும் 'இறையாற்றலே' (The Source of all the Forces, Static State) இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஒருவர் மற்றவருக்குத் துன்பம் செய்தால் அத்துன்பம் யாருக்குப் போய்ச் சேரும்? யார் எதைச் செய்தாலும் அப்படியே கருமையத்தில் (Genetic center) சுருக்கி வைத்திருந்து செய்தவருக்கே காலத்தோடு திருப்பிக் கொடுக்கிறது.
எங்கிருந்து அத்துன்பம் புறப்பட்டதோ அங்கேயே விளைவாகத் திரும்பி வருகிறது.
எல்லாம் வல்ல இறைநிலை (The Law of Nature) அவரவர்கள் வினைக்குத் (Sins and Imprints) தகுந்தவாறு விளைவைப் பொருத்தி வைக்கிறது.
அவரவர் செயலாலேயே அவரவர்க்கு உடல் நோயோ , மனநோயோ உண்டாகின்றன.
அதன் காரணமாக இன்பமோ, துன்பமோ , இலாபமோ, வெற்றியோ விளைகின்றன.
சமுதாயத்தால் (Human Society) உருவாக்கப்பட்டு காக்கப் பெறும் மனிதன் மற்றவர்களுடைய தேவைக்கும் , விருப்பத்துக்கும், அறிவிற்கும், மதிப்பளித்து தனது வாழ்வை நடத்தவேண்டியது கடமையாகும்.
அதற்காக தமது செயல்களைப் பிறர்க்குத் தீமை தராத முறையில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்."
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
No comments:
Post a Comment