"இயற்கையின் இருப்பை உணர்தல், முயற்சியை நல்ல முறையிலே, வெற்றியான வழியிலே செலுத்துதல், உயிர்களுக்குத் தீமை இல்லாத முறையில் ஆக்கத் துறையில் வாழ்வை செலுத்திக் கொள்வது என்பது அறம். மற்றொன்றான அகம் நோக்கிக்ச் செய்யும் இறை வழிபாட்டைத்தான் 'தவம்' (Simplified Kundalini Yoga - SKY) என்று சொல்கின்றோம். எந்த மெய்ப்பொருளை, எந்த உண்மையை உணர்ந்து எந்த இயற்கை வழிபாட்டை உணர்ந்து அதை மதித்து நடக்கின்றோமோ அதை நினைவில் வைத்துக் கொள்கின்றோமோ அதை எப்பொழுதும் விழிப்போடு பார்த்துக் கொள்கின்றோமோ அதுதான் இறைவழிபாடு."
.
இயற்கை என்பது மனிதன் அறிவுக்கும் வாழ்வுக்கும் எற்றமளிக்கும் ஒரு மாபெரும் ஆற்றலுடைய தத்துவம் இது :
1) இருப்பு நிலையான ஆதியில் இறைவெளியாக,
2) இயக்க மூலமான ஆற்றலில் விண்துகளாக,
3) விண்துகள்கள் கூடிய கூட்டு இயக்கத்தில் பஞ்சபூதங்களும் அவை கூடிய அண்டங்கள் பலவாகவும்,
4) இயற்கையின் விளைவுகளை உணரும் ரசிக்கும் நிலையில் ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையிலும் நான்கு நிலைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
.
இயற்கையின் பெருமையை, சிறப்புகளை, விளைவுகளை உணர்ந்து கொள்ள மனிதன் எடுக்கும் முயற்சியில் மன அலைச்சுழல் விரைவைக் குறைத்து, அலைகள் நிலையாக, அதுவே அறிவாக, அதையே தானாக, அவ்வறிவாக இருக்கும் பேராற்றலே எல்லாம் வல்ல இறைவெளியாக உணர்ந்து முழுமை பெறும் முயற்சிதான் தவம் ஆகும். தவத்தால் கண்ட உண்மைகளை மறவாமல் வாழ்வில் ஒழுகி உதவியும் வாழும் நெறியே அறம் ஆகும். தவமும் அறமும் இறைநிலையுணர்ந்து அவ்வழியே வாழத் திறமையளிப்பதால் இவையே இறைவழிபாடு எனப்படுகின்றது. உணர்வோம் வளமோடு வாழ்வோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
*******************************************
அணு :
"அணுவினது தத்துவத்தை யான் ஆராய்ந்தேன்
அண்டபிண்ட சராசரங்கள் அதன் கூட்டன்றோ?
அணுவினிலே சூடுண்டு குளிரும் உண்டு
அதனுள்ளே காந்தமென்ற உயிரும் உண்டு
அணுவினிலே இருளுண்டு ஒளியும் உண்டு
அசைவுண்டு எழுச்சி கவர்ச்சிகளு முண்டு
அணுவினிலே அண்டபிண்டம் அனைத்தும் உண்டு
ஆலமரம் அதன்வித்தில் உள்ளாற்போல".
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
No comments:
Post a Comment