வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!
இன்றைய சிந்தனை :
டிசம்பர் 28 :
தன்னிலை அறிந்தவன் :
ஒரு மருந்துக்கடையில், ஆயிரக்கணக்கான மருந்துகள் இருந்தாலும், அதன் அடுக்கிய வரிசையும் பெயர்களும் நன்றாக அறிந்தவன் எது வேண்டுமோ அதை உடனே தேர்ந்தெடுப்பது போலும், இயந்திர இயக்க அமைப்பு அறிந்த நிபுணன் அதை ஓட்டும்போது, சிறிது கோளாறு ஏற்பட்டாலும் அது ஏற்பட்ட இடத்தைத் தானே தாமதமின்றி தெரிந்து சரிப்படுத்தி ஓட்டுவதைப் போலும், ஒரு அறையில் பல பொருள்களுக்கிடையில் இருக்கும் ஒரு பொருளை வெளிச்சத்தில் எடுப்பது போலவும்,
தன்னிலை அறிந்தவனுக்கு, வாழ்க்கையில் தனக்கோ, சமூகத்திற்கோ விளையும் இன்ப துன்பங்களின் இயல்பு அறிந்து அவ்வப்போது தேவையான முறையில் வாழ்க்கையைத் திருத்தி அனுபவிக்கும், அனுபவிக்கச் செய்யும் திறமை ஏற்படும். புலன்களின் அளவிலே அறிவைக் குறுக்கி அதனால் பெரும்பாலும் ஏற்படும் கற்பனை மயக்கங்களால் தனக்கும், பிறருக்கும், எவ்விதமான துன்பமும் விளைவித்துக் கொள்ளாத விழிப்பு நிலையும் ஏற்படும். ஆகவே ஒழுக்கமும் சிறப்பும் உடைய, உயர்தர முறையில் வாழ்க்கை நடத்தும் தன்மையை ஆன்மீக நிலை அறிந்தவன் பெறுகிறான்.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. அறிந்தவன் :

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
No comments:
Post a Comment