Wednesday, December 28, 2016

வாழ்க வளமுடன்

"எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன.  மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன.  எனவே எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும்.  எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டுதான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும்.  எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித்தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட முடியும்.  எண்ணத்தை ஆராய வேண்டுமென்றால் எண்ணத்தால் தான் ஆராய வேண்டும். 

எண்ணத்திற்குக் காவலாகவும் எண்ணத்தையே தான் வைக்கவேண்டும்.  எண்ணத்திற்கு நீதிபதியாகக்கூட எண்ணத்தையேதான் நியமித்ததாக வேண்டும்.  எண்ணம் தன்னையே கண்காணித்துக் கொண்டு தன்னையே நெறிப்படுத்திக் கொண்டு, தன்னையே திருத்திக்கொண்டு இருக்கவேண்டும்.  இதுதான் "தற்சோதனை"(Introspection).  தற்சோதனையோடு கூடவே நாள்தோறும் பழகி வரும் அகத்தவமாகிய (Simplified Kundalini Yoga - SKY) "குண்டலினியோகம்" மன வலிமையை கூட்டி, மனதை சீர்திருத்திக்கொள்ள பேருதவியாக இருக்கும். "

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

*************************************

விரிவடையா மனநிலையும் விரிந்த மனச்செயலும்:

.
"விரிவடையா உள்ளத்தால் நமது தொண்டின்
வித்து வளர்ச்சி உயர்வு எல்லையாவும்-
தெரியாத அன்பர் பலர்  தங்கள் போக்கில்
திரித்து பல சுடுசொல்லால் வருத்தினாலும்;
பரிவோடு அவர்திருந்த வாழ்த்துச் சொல்வோம்
பரநிலையில் நம் மனத்தை இணைத்துக் கொண்டு
சரியில்லை நம் செயலொன்றுண்டு என்னில்
சமப்படுத்தி நலம் காண்போம் சலிப்பு இன்றி."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment