Thursday, December 29, 2016

வாழ்க வளமுடன்

ஞான மார்க்கத்தில் அனைத்தும் உண்டு

யோகாவும் இருக்கிறது.

ஆன்மீகமும் இருக்கிறது.

யோகா என்று சொன்னால் பயிற்சி.

ஆன்மிகம் என்று சொன்னால் ஆன்மா பற்றிய விளக்கம்.

ஞான வழியில் பயிற்சிகளும் உண்டு. விளக்கங்களும் உண்டு.

குறிப்பாக மனவளக்கலையின் விளக்கம் அத்வைத தத்துவத்தை அடிப்படியாகக் கொண்டது.

இது பக்தி மார்க்கம் அல்ல.

மாறாக ஞான மார்க்கம்.

பக்தி மார்க்கமும் சிறந்தது தான்.

ஆனால் சிறந்ததிலும் சிறப்பு வாய்ந்தது ஞான மார்க்கம்.

பக்தி மார்கத்தில் முழுமையும், தெளிவும் கிடைப்பதில்லை.

ஏனெனில் பக்தி என்று சொன்னாலே நம்பிக்கை என்று தானே பொருள்.

எங்கு நம்பிக்கை இருக்கிறதோ அங்கு சிந்தனை இல்லை.

எங்கு சிந்தனை இல்லையோ அங்கு அறிவில் முழுமையும் தெளிவும் இல்லை.

ஆனால், அத்துவைதம் என்ற ஞான மார்க்கத்தில் சிந்தனைக்குத் தான் இடம்.

ஆழ்ந்து சிந்தித்து, சிந்தித்து இந்த இயற்கையில் என்ன இருக்கிறது...??? என்று கண்டுபிடித்து முழுமையான இயற்கையையும் அறிவு சார்ந்த நிலையில் புரிந்து கொள்கிறோம்.

அப்போது இங்கு அறிவு முழுமை அடையும். தெளிவு பெறும்.

யாருடைய அறிவு தெளிவு பெற்று இருக்கிறதோ,

அவர்களுடைய வாழ்க்கையில் அச்சத்திற்கு இடமில்லை. கவலைக்கும் இடம் இல்லை.

மாறாக அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்தும், நீடித்தும் இருக்கும்.

அதுமட்டுமல்ல இப்படி ஞான மார்கத்தில் தெளிவு பெற்றவர்கள், அவர்களும் மகிழ்ந்தும் வாழ்வார்கள், பிறரை மகிழ்வித்தும் வாழ்வார்கள். வாழ்க வையகம்🌹வாழ்க வளமுடன்🌹குருவே துணை🌹

No comments:

Post a Comment