Saturday, December 31, 2016

மனவளக்கலை ஒரு பெட்டகம்

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!!

இன்றைய சிந்தனை :

ஜனவரி 1 :

மனவளக்கலை ஒரு பெட்டகம் :

தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும், இரண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன.

இரண்டு வேலையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவை உண்டாகும்.

தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை - வினைபதிவுகளை மாற்றி விடலாம்.

ஆசைச் சீரமைப்பு பயிற்சி செய்யுங்கள். உடல் நலம்; மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதியுண்டாம்.

சினம் தவிர்ப்பு பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யுமிடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு, இவைபெருகும். இனிமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

கவலை ஒழிப்பு பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும்.

நான் யார் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு அணைத்து மறை பொருட்களும், மனம், உயிர், மெய்ப் பொருள் உணர்வு உண்டாம்.

இவ்வளவு பயிற்சியும் பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக்கல்வியே "மனவளக் கலை" யாகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கீர்கள். இக்கலையின் மாண்புணர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்றுவிட்டால் அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை.

அமைதியோடு வாழ :

"புத்தாண்டு இன்று பிறந்துளது உலகிற்கு
உத்தமர்கள் அறிவிற்கு ஒத்தபடி எல்லோரும்
சித்தம் மகிழ்வோடு சீர்திருந்தி வாழ்வின் வளம்
அத்தனையும் பெற்று அமைதியோடு வாழ்கவே !"

வாழ்த்து :

"அறிவினிலே சிறந்தோங்கி நீங்கள் வாழ்வீர் !
அணுவும் அதன் இயக்கமும் போல் பிரிவு இன்றி
நெறியினிலே பிறழாது நீங்கள் வாழ்வீர் !
நிலவுலகும் அதன் கவர்ச்சி ஆற்றலும் போல்
வறியோர்க்கு வாழ்வளிப்பீர், உள்ளம் ஒன்றி
வறுமையின்றிச் சூரியனும் ஒளியும் போன்று
சிறியவரும் பெரியவரும் நலமே காணும்
சிறப்புடனே பல்வளமும் பெற்று வாழ்வீர்!"

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Friday, December 30, 2016

வாழ்க வளமுடன்

"இயற்கையின் இருப்பை உணர்தல், முயற்சியை நல்ல முறையிலே, வெற்றியான வழியிலே செலுத்துதல், உயிர்களுக்குத் தீமை இல்லாத முறையில் ஆக்கத் துறையில் வாழ்வை செலுத்திக் கொள்வது என்பது அறம்.  மற்றொன்றான அகம் நோக்கிக்ச் செய்யும் இறை வழிபாட்டைத்தான் 'தவம்' (Simplified Kundalini Yoga - SKY)  என்று சொல்கின்றோம்.  எந்த மெய்ப்பொருளை, எந்த உண்மையை உணர்ந்து எந்த இயற்கை  வழிபாட்டை உணர்ந்து அதை மதித்து நடக்கின்றோமோ அதை நினைவில் வைத்துக் கொள்கின்றோமோ அதை எப்பொழுதும் விழிப்போடு பார்த்துக் கொள்கின்றோமோ அதுதான் இறைவழிபாடு."

.
இயற்கை என்பது மனிதன் அறிவுக்கும் வாழ்வுக்கும் எற்றமளிக்கும் ஒரு மாபெரும் ஆற்றலுடைய தத்துவம் இது :

1) இருப்பு நிலையான ஆதியில் இறைவெளியாக,

2) இயக்க மூலமான ஆற்றலில் விண்துகளாக,

3) விண்துகள்கள் கூடிய கூட்டு இயக்கத்தில் பஞ்சபூதங்களும் அவை கூடிய அண்டங்கள் பலவாகவும்,

4) இயற்கையின் விளைவுகளை உணரும் ரசிக்கும் நிலையில் ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையிலும் நான்கு நிலைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. 
.

இயற்கையின் பெருமையை, சிறப்புகளை, விளைவுகளை உணர்ந்து கொள்ள மனிதன் எடுக்கும் முயற்சியில் மன அலைச்சுழல் விரைவைக் குறைத்து, அலைகள் நிலையாக, அதுவே அறிவாக, அதையே தானாக, அவ்வறிவாக இருக்கும் பேராற்றலே எல்லாம் வல்ல இறைவெளியாக உணர்ந்து முழுமை பெறும் முயற்சிதான் தவம் ஆகும்.  தவத்தால் கண்ட உண்மைகளை மறவாமல் வாழ்வில் ஒழுகி உதவியும் வாழும் நெறியே அறம் ஆகும்.  தவமும் அறமும் இறைநிலையுணர்ந்து அவ்வழியே வாழத் திறமையளிப்பதால் இவையே இறைவழிபாடு எனப்படுகின்றது.  உணர்வோம் வளமோடு வாழ்வோம்."

.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

*******************************************

அணு :
"அணுவினது தத்துவத்தை யான் ஆராய்ந்தேன்
அண்டபிண்ட சராசரங்கள் அதன் கூட்டன்றோ?
அணுவினிலே சூடுண்டு குளிரும் உண்டு
அதனுள்ளே காந்தமென்ற உயிரும் உண்டு
அணுவினிலே இருளுண்டு ஒளியும் உண்டு
அசைவுண்டு எழுச்சி கவர்ச்சிகளு முண்டு
அணுவினிலே அண்டபிண்டம் அனைத்தும் உண்டு
ஆலமரம் அதன்வித்தில் உள்ளாற்போல".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

மனிதன்

வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன் !!

இன்றைய சிந்தனை :

டிசம்பர் 31 :

மனிதன் :

தெய்வமெனும் மெய்ப்பொருளே ஆற்றலாகி, ஆற்றலின் திணிவு நிலை வேறுபாடுகளால் விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் எனும் ஐம்பூதங்களாகி, பேரியக்க மண்டலமெனும் பிரபஞ்சமாக விரிந்து, இவ்வைந்தும் பொருத்தமான அளவில் இணைந்து ஒரு சிற்றுருவம் தாங்கி அவற்றின் ஒழுங்கான சுழலோட்டம் ஒன்றோடொன்று ஒத்து, அமைந்து உணர்ச்சி நிலை பெறும் போது உயிராகி, அவ்வுயிரே தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவை மூலம் தொடர்பு கொள்ளும் பொருட்களுக்கேற்ப ஊறு, சுவை, மணம், ஒளி, ஒலியென்னும் பஞ்சதன் மாத்திரைகளாகி தனது விரிவான பேரியக்க மண்டல அமைப்பை, உணர்ந்து இரசித்து இன்புற்று, தன் முழுமை நோக்கி விரையும் பயணத்தில் தடைப்படும் நிகழ்ச்சிகளையெல்லாம் துன்பமாகவும், தடையற்ற பயணத்தை இன்பமாகவும் உணர்ந்து, துன்ப இன்ப நிலை காண ஓங்கிய சிறப்பில் வாழ்வின் உண்மையறியும், பேரார்வமாகிய ஆறாம் நிலையறிவைப் பெற்று மனம், உயிர், மெய்ப்பொருள் எனும் மூன்று மறை நிலைகளை உணர்ந்து நிறைவும், முழுமையும் பெறத்தக்க, பெற்று அமைதி பெற்ற ஒரு திருஉருவமே மனிதன்.

வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன் !!

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Thursday, December 29, 2016

குங்ஃபூ வீரர் புரூஸ் லீ, இளைஞர்களுக்குச் சொன்ன 5 யோசனைகள்!

குங்ஃபூ வீரர் புரூஸ் லீ, இளைஞர்களுக்குச் சொன்ன 5 யோசனைகள்!

**  உனது தவறுகள் மன்னிக்கப்படக்கூடியவையே, அவற்றை ஒப்புக்கொள்ளும் தைரியம் உனக்கு இருக்கும்பட்சத்தில்!

**   அறிவு உனக்கு சக்தியைத் தரும்; ஆனால், குணம்தான் மரியாதையைத் தரும்.

**    ஒரு செயல் குறித்து ரொம்ப காலம் சிந்தித்துக்கொண்டு இருந்தால், அதை ஒருநாளும் உன்னால் செய்து முடிக்க முடியாது. உனது இலக்கை நோக்கி தினம் ஓரடியாவது எடுத்து வைப்பது அவசியம்!

**   தோல்வி என்பது மனதைப் பொறுத்தது. தோல்வியை மனப்பூர்வமாக ஏற்காதவரையில் நீ தோல்வியாளன் இல்லை.

**   கற்றால் மட்டும் போதாது; கடைப்பிடிக்க வேண்டும். விரும்பினால் மட்டும் போதாது; வேலையில் இறங்க வேண்டும்!

கடவுள் எங்கே? எப்படி?
=================

ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ''அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய்.

அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது ? எனக்குக் காட்டு'' எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை.

''அம்மா!நீ தண்ணீரைக் காட்டு'' என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது.

அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.

உடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.

உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது. அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.
அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவில் நிரம்பி இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை. எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.

வாழ்க வளமுடன்

ஞான மார்க்கத்தில் அனைத்தும் உண்டு

யோகாவும் இருக்கிறது.

ஆன்மீகமும் இருக்கிறது.

யோகா என்று சொன்னால் பயிற்சி.

ஆன்மிகம் என்று சொன்னால் ஆன்மா பற்றிய விளக்கம்.

ஞான வழியில் பயிற்சிகளும் உண்டு. விளக்கங்களும் உண்டு.

குறிப்பாக மனவளக்கலையின் விளக்கம் அத்வைத தத்துவத்தை அடிப்படியாகக் கொண்டது.

இது பக்தி மார்க்கம் அல்ல.

மாறாக ஞான மார்க்கம்.

பக்தி மார்க்கமும் சிறந்தது தான்.

ஆனால் சிறந்ததிலும் சிறப்பு வாய்ந்தது ஞான மார்க்கம்.

பக்தி மார்கத்தில் முழுமையும், தெளிவும் கிடைப்பதில்லை.

ஏனெனில் பக்தி என்று சொன்னாலே நம்பிக்கை என்று தானே பொருள்.

எங்கு நம்பிக்கை இருக்கிறதோ அங்கு சிந்தனை இல்லை.

எங்கு சிந்தனை இல்லையோ அங்கு அறிவில் முழுமையும் தெளிவும் இல்லை.

ஆனால், அத்துவைதம் என்ற ஞான மார்க்கத்தில் சிந்தனைக்குத் தான் இடம்.

ஆழ்ந்து சிந்தித்து, சிந்தித்து இந்த இயற்கையில் என்ன இருக்கிறது...??? என்று கண்டுபிடித்து முழுமையான இயற்கையையும் அறிவு சார்ந்த நிலையில் புரிந்து கொள்கிறோம்.

அப்போது இங்கு அறிவு முழுமை அடையும். தெளிவு பெறும்.

யாருடைய அறிவு தெளிவு பெற்று இருக்கிறதோ,

அவர்களுடைய வாழ்க்கையில் அச்சத்திற்கு இடமில்லை. கவலைக்கும் இடம் இல்லை.

மாறாக அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்தும், நீடித்தும் இருக்கும்.

அதுமட்டுமல்ல இப்படி ஞான மார்கத்தில் தெளிவு பெற்றவர்கள், அவர்களும் மகிழ்ந்தும் வாழ்வார்கள், பிறரை மகிழ்வித்தும் வாழ்வார்கள். வாழ்க வையகம்🌹வாழ்க வளமுடன்🌹குருவே துணை🌹

Wednesday, December 28, 2016

வாழ்க வளமுடன் .

நாம் செய்த
வினைகளின்
விளைவைநாம் செய்த
வினைகளின்
விளைவை
அனுபவித்தே
ஆக வேண்டும்,,,

மகரிஷியின் வைர வரிகள் :

அவரவர் விருப்பம் போல செயல் புரியலாம்" என்ற எண்ணம் இந்த சமுதாயத்தில் பலரிடம் உள்ளது.  இது மிகத் தவறாகும்."  

இறையாற்றல்' எல்லா இடங்களிலும், எல்லாப் பொருட்களிலும் எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளது.

ஒவ்வொருவருக்குள்ளும் 'இறையாற்றலே' (The Source of all the Forces, Static State) இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஒருவர் மற்றவருக்குத் துன்பம் செய்தால் அத்துன்பம் யாருக்குப் போய்ச் சேரும்? யார் எதைச் செய்தாலும் அப்படியே கருமையத்தில் (Genetic center) சுருக்கி வைத்திருந்து செய்தவருக்கே காலத்தோடு திருப்பிக் கொடுக்கிறது.

எங்கிருந்து அத்துன்பம் புறப்பட்டதோ அங்கேயே விளைவாகத் திரும்பி வருகிறது. 

எல்லாம் வல்ல இறைநிலை (The Law of Nature) அவரவர்கள் வினைக்குத் (Sins and Imprints)  தகுந்தவாறு விளைவைப்  பொருத்தி வைக்கிறது.

அவரவர் செயலாலேயே அவரவர்க்கு உடல் நோயோ , மனநோயோ உண்டாகின்றன.

அதன் காரணமாக இன்பமோ, துன்பமோ , இலாபமோ, வெற்றியோ விளைகின்றன.

சமுதாயத்தால் (Human Society) உருவாக்கப்பட்டு காக்கப் பெறும் மனிதன் மற்றவர்களுடைய தேவைக்கும் , விருப்பத்துக்கும், அறிவிற்கும், மதிப்பளித்து தனது வாழ்வை நடத்தவேண்டியது கடமையாகும்.

அதற்காக தமது செயல்களைப் பிறர்க்குத் தீமை தராத முறையில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்."

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
அனுபவித்தே
ஆக வேண்டும்,,,

மகரிஷியின் வைர வரிகள் :

அவரவர் விருப்பம் போல செயல் புரியலாம்" என்ற எண்ணம் இந்த சமுதாயத்தில் பலரிடம் உள்ளது.  இது மிகத் தவறாகும்."  

இறையாற்றல்' எல்லா இடங்களிலும், எல்லாப் பொருட்களிலும் எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளது.

ஒவ்வொருவருக்குள்ளும் 'இறையாற்றலே' (The Source of all the Forces, Static State) இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஒருவர் மற்றவருக்குத் துன்பம் செய்தால் அத்துன்பம் யாருக்குப் போய்ச் சேரும்? யார் எதைச் செய்தாலும் அப்படியே கருமையத்தில் (Genetic center) சுருக்கி வைத்திருந்து செய்தவருக்கே காலத்தோடு திருப்பிக் கொடுக்கிறது.

எங்கிருந்து அத்துன்பம் புறப்பட்டதோ அங்கேயே விளைவாகத் திரும்பி வருகிறது. 

எல்லாம் வல்ல இறைநிலை (The Law of Nature) அவரவர்கள் வினைக்குத் (Sins and Imprints)  தகுந்தவாறு விளைவைப்  பொருத்தி வைக்கிறது.

அவரவர் செயலாலேயே அவரவர்க்கு உடல் நோயோ , மனநோயோ உண்டாகின்றன.

அதன் காரணமாக இன்பமோ, துன்பமோ , இலாபமோ, வெற்றியோ விளைகின்றன.

சமுதாயத்தால் (Human Society) உருவாக்கப்பட்டு காக்கப் பெறும் மனிதன் மற்றவர்களுடைய தேவைக்கும் , விருப்பத்துக்கும், அறிவிற்கும், மதிப்பளித்து தனது வாழ்வை நடத்தவேண்டியது கடமையாகும்.

அதற்காக தமது செயல்களைப் பிறர்க்குத் தீமை தராத முறையில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்."

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வளமுடன்

*வாழ்க்கை மலர்கள்: டிசம்பர் 27*

*யோகப்பயிற்சி*

தோற்றப் பொருட்களைப் பற்றி அறியும் விஞ்ஞான அறிவோடு, தோன்றாத மறைபொருட்களாக உள்ள மனம், உயிர், மெய், இம்மூன்றையும் அறிய வேண்டும். இதற்கு முறையான உளப்பயிற்சியே அகத்தவம் [தியானம்]. இது ஒன்றுதான் சிறந்த வழி. இத்தகைய உளப்பயிற்சியினால் அறிவானது கூர்மையும், அமைதியும், உறுதியும், தெளிவும் பெறும்; பேரியக்க மண்டலம் முழுவதையையும் தனக்குள்ளாக்கி விரிந்து நின்று ஆழ்ந்து சிந்திக்கும் திறன் பெறுகிறது. இதனால் எல்லாப் பொருட்களின் தன்மைகளையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

பிற உயிர் பெறும் இன்ப துன்ப உணர்வுகளின் தன்மையை ஊடுருவி நின்று அறியும் நுட்பமும், உயிர்கள் படும் துன்பத்தை இயன்ற வரை போக்க உதவும் தகைமையும், எவ்வுயிர்க்கும் துன்பம் விளைக்காமல் தனது தேவை, விருப்பம் இவற்றை நிறைவு செய்து கொள்ளும் ஒழுக்கப் பண்பும் இயல்பாக உருவாகிவிடும். எனவே, யோக சாதனையால் மனிதன் அறிவிலும், செயலிலும் சிறந்து விளங்க முடியும். இவையெல்லாம் பொதுவாக யோகப் பயிற்சியினால் மனிதனுக்குக் கிடைக்கும் பெரும் பயன்கள்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  www.facebook.com/vethathiri.gnanam

வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !! இன்றைய சிந்தனை : டிசம்பர் 28 : தன்னிலை அறிந்தவன் : ஒரு மருந்துக்கடையில், ஆயிரக்கணக்கான மருந்துகள் இருந்தாலும், அதன் அடுக்கிய வரிசையும் பெயர்களும் நன்றாக அறிந்தவன் எது வேண்டுமோ அதை உடனே தேர்ந்தெடுப்பது போலும், இயந்திர இயக்க அமைப்பு அறிந்த நிபுணன் அதை ஓட்டும்போது, சிறிது கோளாறு ஏற்பட்டாலும் அது ஏற்பட்ட இடத்தைத் தானே தாமதமின்றி தெரிந்து சரிப்படுத்தி ஓட்டுவதைப் போலும், ஒரு அறையில் பல பொருள்களுக்கிடையில் இருக்கும் ஒரு பொருளை வெளிச்சத்தில் எடுப்பது போலவும், தன்னிலை அறிந்தவனுக்கு, வாழ்க்கையில் தனக்கோ, சமூகத்திற்கோ விளையும் இன்ப துன்பங்களின் இயல்பு அறிந்து அவ்வப்போது தேவையான முறையில் வாழ்க்கையைத் திருத்தி அனுபவிக்கும், அனுபவிக்கச் செய்யும் திறமை ஏற்படும். புலன்களின் அளவிலே அறிவைக் குறுக்கி அதனால் பெரும்பாலும் ஏற்படும் கற்பனை மயக்கங்களால் தனக்கும், பிறருக்கும், எவ்விதமான துன்பமும் விளைவித்துக் கொள்ளாத விழிப்பு நிலையும் ஏற்படும். ஆகவே ஒழுக்கமும் சிறப்பும் உடைய, உயர்தர முறையில் வாழ்க்கை நடத்தும் தன்மையை ஆன்மீக நிலை அறிந்தவன் பெறுகிறான். வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !! - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன் !!

இன்றைய சிந்தனை :

டிசம்பர் 28 :

தன்னிலை அறிந்தவன் :

ஒரு மருந்துக்கடையில், ஆயிரக்கணக்கான மருந்துகள் இருந்தாலும், அதன் அடுக்கிய வரிசையும் பெயர்களும் நன்றாக அறிந்தவன் எது வேண்டுமோ அதை உடனே தேர்ந்தெடுப்பது போலும், இயந்திர இயக்க அமைப்பு அறிந்த நிபுணன் அதை ஓட்டும்போது, சிறிது கோளாறு ஏற்பட்டாலும் அது ஏற்பட்ட இடத்தைத் தானே தாமதமின்றி தெரிந்து சரிப்படுத்தி ஓட்டுவதைப் போலும், ஒரு அறையில் பல பொருள்களுக்கிடையில் இருக்கும் ஒரு பொருளை வெளிச்சத்தில் எடுப்பது போலவும்,

தன்னிலை அறிந்தவனுக்கு, வாழ்க்கையில் தனக்கோ, சமூகத்திற்கோ விளையும் இன்ப துன்பங்களின் இயல்பு அறிந்து அவ்வப்போது தேவையான முறையில் வாழ்க்கையைத் திருத்தி அனுபவிக்கும், அனுபவிக்கச் செய்யும் திறமை ஏற்படும். புலன்களின் அளவிலே அறிவைக் குறுக்கி அதனால் பெரும்பாலும் ஏற்படும் கற்பனை மயக்கங்களால் தனக்கும், பிறருக்கும், எவ்விதமான துன்பமும் விளைவித்துக் கொள்ளாத விழிப்பு நிலையும் ஏற்படும். ஆகவே ஒழுக்கமும் சிறப்பும் உடைய, உயர்தர முறையில் வாழ்க்கை நடத்தும் தன்மையை ஆன்மீக நிலை அறிந்தவன் பெறுகிறான்.

வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன் !!

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. அறிந்தவன் :

ஒரு மருந்துக்கடையில், ஆயிரக்கணக்கான மருந்துகள் இருந்தாலும், அதன் அடுக்கிய வரிசையும் பெயர்களும் நன்றாக அறிந்தவன் எது வேண்டுமோ அதை உடனே தேர்ந்தெடுப்பது போலும், இயந்திர இயக்க அமைப்பு அறிந்த நிபுணன் அதை ஓட்டும்போது, சிறிது கோளாறு ஏற்பட்டாலும் அது ஏற்பட்ட இடத்தைத் தானே தாமதமின்றி தெரிந்து சரிப்படுத்தி ஓட்டுவதைப் போலும், ஒரு அறையில் பல பொருள்களுக்கிடையில் இருக்கும் ஒரு பொருளை வெளிச்சத்தில் எடுப்பது போலவும்,

தன்னிலை அறிந்தவனுக்கு, வாழ்க்கையில் தனக்கோ, சமூகத்திற்கோ விளையும் இன்ப துன்பங்களின் இயல்பு அறிந்து அவ்வப்போது தேவையான முறையில் வாழ்க்கையைத் திருத்தி அனுபவிக்கும், அனுபவிக்கச் செய்யும் திறமை ஏற்படும். புலன்களின் அளவிலே அறிவைக் குறுக்கி அதனால் பெரும்பாலும் ஏற்படும் கற்பனை மயக்கங்களால் தனக்கும், பிறருக்கும், எவ்விதமான துன்பமும் விளைவித்துக் கொள்ளாத விழிப்பு நிலையும் ஏற்படும். ஆகவே ஒழுக்கமும் சிறப்பும் உடைய, உயர்தர முறையில் வாழ்க்கை நடத்தும் தன்மையை ஆன்மீக நிலை அறிந்தவன் பெறுகிறான்.

வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன் !!

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வளமுடன்

"எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன.  மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன.  எனவே எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும்.  எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டுதான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும்.  எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித்தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட முடியும்.  எண்ணத்தை ஆராய வேண்டுமென்றால் எண்ணத்தால் தான் ஆராய வேண்டும். 

எண்ணத்திற்குக் காவலாகவும் எண்ணத்தையே தான் வைக்கவேண்டும்.  எண்ணத்திற்கு நீதிபதியாகக்கூட எண்ணத்தையேதான் நியமித்ததாக வேண்டும்.  எண்ணம் தன்னையே கண்காணித்துக் கொண்டு தன்னையே நெறிப்படுத்திக் கொண்டு, தன்னையே திருத்திக்கொண்டு இருக்கவேண்டும்.  இதுதான் "தற்சோதனை"(Introspection).  தற்சோதனையோடு கூடவே நாள்தோறும் பழகி வரும் அகத்தவமாகிய (Simplified Kundalini Yoga - SKY) "குண்டலினியோகம்" மன வலிமையை கூட்டி, மனதை சீர்திருத்திக்கொள்ள பேருதவியாக இருக்கும். "

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

*************************************

விரிவடையா மனநிலையும் விரிந்த மனச்செயலும்:

.
"விரிவடையா உள்ளத்தால் நமது தொண்டின்
வித்து வளர்ச்சி உயர்வு எல்லையாவும்-
தெரியாத அன்பர் பலர்  தங்கள் போக்கில்
திரித்து பல சுடுசொல்லால் வருத்தினாலும்;
பரிவோடு அவர்திருந்த வாழ்த்துச் சொல்வோம்
பரநிலையில் நம் மனத்தை இணைத்துக் கொண்டு
சரியில்லை நம் செயலொன்றுண்டு என்னில்
சமப்படுத்தி நலம் காண்போம் சலிப்பு இன்றி."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வளமுடன்

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
கேள்வி: சுவாமிஜி! உலகில் நான்கில் மூன்று பகுதி கடலாக இருந்தும் மழை அடிக்கடி பொய்ப்பது ஏன்?
பதில்: உலகில் 72 சதவீதம் நீரால் சூழப்படுள்ளது. மீதம் 28 சதவீதம் தான் நிலம். உலகிற்கு மழை எவ்வளவு உண்டாகிறது என்றால் சூரிய வெளிச்சம் கடல் மீது எந்த அளவிற்குப்படுகிறதோ அந்த அளவிற்கே நீர் ஆவியாகி மேலே செல்கிறது. ஆவியான கடலைத்தான் வானத்தில் மேகம் என்கிறோம்.
ஆவியாகி மேலே சென்ற நீர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இறங்கித்தானே ஆகவேண்டும்! மழையும் பெய்துதானே ஆக வேண்டும். பெய்கிறது; ஆனால் தேவையில்லாத இடத்தில் பெய்கிறது. அதாவது கடலிலேயே பெய்து விடுகிறது. அப்படியானால் இயற்கைக்குப் பாரபட்சமா? இல்லை; மனிதனைத் தண்டிக்க வேண்டும் என்று அது அவ்வாறு செய்வதில்லை.
இயற்கை பொய்ப்பதற்கு மனிதனுடைய எண்ணம் தான் காரணமாக இருக்கிறது. எண்ணமே இயற்கையின் சிகரமாகும். மனித மனம் ஒருவருக்கொருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கும். ஆனால் ஒருவர் மற்றவருக்கு அது கிடைத்துவிடக்கூடாது, அவன் நம்மை விட நன்றாக இருந்து விடக்கூடாது என்று சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இயற்கை என்ன செய்யும்?
சில நூறு பேர்களை ஒரு சேர நேசிக்கிறவர்கள், உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அப்படி யாரேனும் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவரால், சிறிது லாபம் அடைகின்றவர்கள் தவிர வேறுயாருமில்லை.
இப்படி ஒருவருக்கொருவர் சபித்துக் கொள்ளும் போது, அதற்கு இயற்கையில் ஒரு விளைவு வரவேண்டும் அல்லவா? இயற்கையின் கருணைச் செயல் அங்கு தடைப்படுகிறது. அதனால் மனிதன் வாழாத இடத்தில், மழை பெய்துவிட்டுச் செல்கிறது. மனிதமனம், தானே இறையாற்றலாக உள்ளதை உணர்ந்து, தன்னால் இயற்கைக்குக் களங்கம் வராது இருக்க நல்லதையே எண்ணிப் பழக வேண்டும்.
முழுமையின் பின்னமாக மனிதமனம் முழுமையாலே இணைக்கப் பட்டுள்ளது. அங்கு முனைப்புத் தோன்றி அன்பு வரண்டுவிடும் பொழுது, இயற்கையின் சீர்மையும், ஒழுங்கும் கெடுகிறது. அவ்வாறு கெடாமல் இருக்க மனிதன் உயிர்களிடம் வற்றாத அன்பு செய்தல் வேண்டும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி💥