Monday, January 30, 2017
வாழ்க வளமுடன்
🌍வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🌍 குடும்ப அமைதியை இழந்து பெறுவது அது ஞானமேயினும் அதனால் ஒரு பயனும் வராது. - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன்
🌍வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌍 கவர்ச்சி தரும் அலங்காரம் யாருக்காக? கண்ணியமாம் உடை ஒழுக்கம் கடைபிடிப்போம். - அருட்தந்தை வேதாத்திரி மஹரிஷி.
வாழ்க வளமுடன்
🌷வாழ்க வளமுடன்🌷 அனைத்தையும் கற்பதற்கும், கற்றபடி வாழ்ந்து பயன் பெறுவதற்கும் மனிதனிடம் போதிய அறிவு அமைந்துள்ளது 🌷வேதாத்திரி மகரிஷி 🌷
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அவனில் அணு, அணுவில் அவன் உன்னில் எல்லாம் உன்னை நீ அறி. - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் உள்ளதை உணர், நல்லதை செய், அல்லதை விடு. - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
எண்ணங்கள்- வேதாத்திரி மகரிஷி பொன்மொழிகள்
எண்ணங்கள்- வேதாத்திரி மகரிஷி பொன்மொழிகள்
அருட்தந்தையின் அருள் மொழிகளில் சில:
1. எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி.
2. எண்ணம் எங்கும் செல்லும் வல்லமை உடையது. விழிப்பு தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும்.
தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும்.
அதற்கு வழி எப்போதும் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
3. எணணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி.
எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது, அதிலிருந்து பல்வேறு அகக் காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாக திகழலாம்.
4. எண்ணியவெல்லாம் எண்ணியபடியாகும் எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.
5. உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே
உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயுமே.
6. இயற்கையின் சிறப்பே எண்ணமாகும். தெளிந்து திறன் பெற்ற எண்ணத்திற்கு இயற்கை ஒத்துழைக்கின்றது; கட்டுப்படுகின்றது.
7. வெற்றி வேண்டுவோர் எதிர் வரும் பிரச்சனையைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை வேண்டும்.
மனிதனின் சிறப்பு:
வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.
உலக பொது அருள்நெறி சமய ஆண்டு : 31
ஜனவரி : 28
இன்றைய சிந்தனை :
மனிதனின் சிறப்பு:
"உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த மேலான ஒரு இயக்கநிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறைநிலையை முழுமையாக எடுத்துக்காட்டும், பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதனே.
உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு, அறிவுக்குள் அருட்பேராற்றலின் இயற்கை [மெய்ப்பொருள்]. இவ்வாறு ஒன்றில் ஒன்றாக நிலைகொண்டு மனித உரு சிறப்பாக, வியத்தகு முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. உடல் குறிப்பிட்ட அளவு பருமனால் எல்லை உடையது. உயிரானது நுண்ணியக்க மூலக்கூறான விண் எனும் நுண்துகள்கள் கோடிக்கணக்கில் ஒன்றிணைந்து ஒரு தொகுப்பாக இயங்கும் ஆற்றல். இந்த உயிரானது உடலுக்குள் சுருங்கவும், உடலுக்குப் புறத்தே தக்க அளவு விரியவும் கூடியது.
அறிவு என்பது உயிரை மையமாகக் கொண்ட மெய்ப்பொருள். உடல் மூலம் ஆற்றிய வினைகளினால் பெற்ற அனுபவம், சிந்தனை, கற்பனை இவற்றிற்கேற்ப விரிந்தும், சுருங்கியும் செயல்புரியும் ஆற்றலுடையது. அறிவில் அடங்கியுள்ள இரகசியங்கள் எண்ணி அறிய முடியாதவை. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளான மெய்ப்பொருள் உயிராற்றலை மையமாகக் கொண்டு தனது அசைவினாலும், உணர்வாலும் ஆற்றிய வினைப்பதிவுகள் அனைத்தும் அடக்கம் பெற்ற கருவூலம் அறிவு ஆகும். இது உயிர்த்துகளின் மையத்தில் தொடங்கி உயிர்த்துகள் தற்சுழற்சியால் விளையும் ஜீவகாந்த சக்தி மூலம் உடல் வரையிலும் மேலும் உடலுக்கு வெளியே புலன்கள் மூலம் உணரும் பொருட்கள் வரையிலும் யூகத்தால் பேரியக்க மண்டலம், அதற்கப்பால் நிலைத்த சுத்தவெளி எனக் கருதப்படும் மெய்ப்பொருள் வரையிலும் விரிந்து சுருங்கும் இயல்புடையது.
எல்லாம் வல்ல மெய்ப்பொருளே சுத்தவெளியாகவும், மெய்ப்பொருளாகவும் விண் முதல் மண் வரையிலான பஞ்ச பூதங்களின் இணைப்பால் ஆகிய பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் இயக்க ஒழுங்காகவும், உயிர்களிடத்தில் புலனுணர்வாகவும், மனிதனிடத்தில் எல்லாமாக இருக்கும், தன் முழுமையை உணரும் பேரறிவாகவும் இருக்கிறது. இந்த நான்கு தத்துவங்களும் ஒன்றிணைந்த மாபெரும் வல்லமையுடைய அறிவிலும், செயலிலும் சிறந்ததோர் உருவம் மனிதன்."
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
நமது சகோதரர்கள்:
வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.
உலக பொது அருள்நெறி சமய ஆண்டு : 31
ஜனவரி : 30
இன்றைய சிந்தனை :
நமது சகோதரர்கள்:
"பெரும்பாலான நாடுகளில் சட்டங்களாலேயே குற்றங்கள் தோன்றுகின்றன. பெருகுகின்றன. அக்குற்றங்களைக் குறைக்க மேலும் சட்டங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. சட்டங்களே மனிதர் வாழ்வைப் பாழாக்கும் மாயக் கருவிகளாக இருக்கின்றன. சமுதாயமே தனி மனிதர் குற்றங்களைச் செய்யக் காரணமாகின்றது. எந்தச் சமுதாயம் தனி மனிதன் குற்றத்திற்குக் காரணமோ அதுவே தனி மனிதனை தண்டித்துக் கொண்டே இருக்கின்றனது. நீதி எங்கே? சட்டம் எங்கே? குற்றம் எங்கே? தண்டனை எங்கே?
இந்த அலங்கோலத்திற்கு காரணம் என்ன? ஜனநாயகம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் என்ற முத்திரையில் சுயநலமிகள் குழுவினர் குழுவினராக இணைந்து ஆட்சியை மாறிமாறிக் கைப்பற்றி மக்களை காயாடும் ஒரு சூதாட்டம் அன்றோ?
உத்தமர்கள் நிர்வாகத்தில் ஆட்சி நிலைபெற முடியாமலும், உத்தமர்கள் ஆட்சியிலே பங்கெடுத்துக் கொள்ள முடியாமலும் சுயநலமிகள் புரியும் தந்திரங்கள் எவ்வளவு ! இந்த நிலைமையில் இத்தகைய அரசியல்வாதிகளை அவர்கள் கொண்டுள்ள ஆட்சிபோதை என்ற மயக்கத்திலிருந்து மக்கள்தானே விடுவிக்க வேண்டும்?! ஆட்சி போதை என்ற வெள்ளம் அவர்களைத் தாண்டி அடித்துச் செல்லுகின்றது. வாருங்கள் சகோதரர்களே!.. ஓட்டுரிமை என்ற கருவியைச் சரியாகப் பயன்படுத்தி வெள்ளம் புறப்படும் இடமாகிய மதகை அடைத்து ஆட்சி போதை கொண்ட அரசியல்வாதிகளையும் அவர்களைத் தொடர்ந்து ஆபத்தில் சிக்கித் தவிக்கும் மக்களையும் நாமே தான் மீட்க வேண்டும்; ஏனெனில் அவர்கள் அனைவரும் மனித இனம்; நமது சகோதரர்கள்."
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
28.1.
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
கேள்வி: சுவாமிஜி, இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரைத் தியானத்தின் மூலமாக நிறுத்த முடியுமா?
பதில்: இரண்டு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போரின் விளைவுகளையும், கொடுமைகளையும் தியானத்தின் மூலம் ஏற்படக் கூடிய மன அமைதியினால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். நிறுத்த முடியாது. தியானம் செய்தாலும் தனி மனிதனுடைய மனோசக்திக்கு ஓர் எல்லை உண்டு. போர் வெறியர்கள் அத்தனை பேருடைய மனதையும் மாற்றக் கூடிய அளவுக்குத் தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றால் போரை நிறுத்தி, அமைதி ஏற்படுத்த இயலும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும், எண்ணும் எண்ணங்கள் எங்கும் பாயும். - அருள்தந்தை வேதாத்திரி
மனித நேயம்
வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.
உலக பொது அருள்நெறி சமய ஆண்டு : 31
ஜனவரி : 29
இன்றைய சிந்தனை :
மனித நேயம்:
"இன்றைய வாழ்க்கை நிலையைக் கவனிக்கும்போது நாம் தெரிந்தோ தெரியாமலோ சில கருத்துக்களை நம் மனத்தில் பதிய வைத்துக் கொள்கிறோம். நட்புறவை வளர்க்கும் சில கருத்துக்களை ஏற்று வருகிறோம். அதோடு சில வெறுப்புணர்ச்சியூட்டும் கருத்துக்களையும் நாம் பதிவு செய்துகொண்டு வருகிறோம்.
மொத்தத்தில் பார்த்தால் உலகில் நட்புணர்ச்சியைவிட வெறுப்புணர்ச்சி தான் அதிகமாகக் காணப்படுகிறது. கட்சிப்பற்று காரணமாக சாதிப்பற்று காரணமாக, நாட்டுப்பற்று, குடும்பப்பற்று காரணமாகவும் வெறுப்புணர்ச்சியே வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த வெறுப்புணர்ச்சி பெரிதும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே எழக் காண்கிறது.
ஒருவர் செய்கிற காரியமோ, பேசுகிறபேச்சோ நமக்குப் பிடிக்காத காரணத்தால் கோபம் எழும்போதே அது மூலையிலுள்ள சிற்றறைகளைத் தாக்கி வெறுப்புணர்ச்சியை பதிவு செய்துவிடுகிறது. கணவன் மனைவி உறவில் இவ்வித வெறுப்புணர்வு ஏற்பட்டுவிடுமானால், அந்த குடும்பத்தில் ஒருபோதும் அமைதி இருக்காது. ஒருத்தரை ஒருவர் சபித்துக் கொள்வதாகத்தான் இருக்கும். ஆனால் இதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் ஒருத்தருக்கொருத்தர் தமக்கே தம் குடும்பத்திற்கே தீமை விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.
மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும். மதித்து நடக்க வேண்டும். கூடுமானவரை ஒருவரை ஒருவர் எப்போதும் வாழ்க வாழ்க என்று வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நேசம் வளரும், வெறுப்பு நீங்கும் நன்மை ஏற்படும்."
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் கடன், வறுமை, கல்லியின்மை என்ற மூன்றும் களங்கங்கள் உலகினிலே மறைய வேண்டும். - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன் .
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் உலகிலேயே மிக உயர்ந்த பிறப்பு இந்த மனிதப்பிறப்பு :கிடைத்தற்க்ரிய பிறப்பு.
அளவு முறை:
வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.
உலக பொது அருள்நெறி சமய ஆண்டு : 31
ஜனவரி : 31
இன்றைய சிந்தனை :
அளவு முறை:
"உணவு சுவையாக உள்ளது என்று மேலே மேலே சாப்பிட்டுக் கொண்டே போனால் இன்றைக்கு வயிற்று வலி, நாளைக்கு வயிற்றுப்போக்கு என்றதாகும். டாக்டரிடம் போனால் நோய்க்கு மருந்து கொடுப்பார். குணமான மறுகணமே மீண்டும் அளவுக்கு அதிகமான உணவு நாடிப்போனால், வாழ்நாள் முழுவதும் வயிற்றுப்போக்கு என்ற நிலை ஏற்பட்டால் வாழ்க்கை என்ன ஆகும்? வேறு எந்தக் காரியத்தை நீங்கள் கவனிக்க முடியும்? சாப்பிடுவதை ஒரு உதாரணத்திற்காகச் சொன்னேன். அதேபோல் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டால் உடல் வலுவிழந்து போகிறது; உடல் கெட்டால், மனம் கெட்டால், வாழ்வும் சீரழிகிறது. நாம் கெடுகிறோம்; குடும்பம் பாதிக்கப்படுகிறது; சமுதாயம் தப்புவதில்லை.
ஐயுணர்வோடு மெய்யுணர்வு இணைந்து வரும்போது உங்களுக்கு என்ன திடம் வருகிறதென்றால் உறவிலேயே ஒரு தெளிவு, அதாவது detachment in attachment, வருகிறது. இதுதான் உறவிலேயே துறவு நிலை. இது அல்லாது துறவு நிலை என்று தனியாக ஒன்று இருக்கவே முடியாது. அப்படியே எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போவதுதான் துறவு என்றால் இறப்பவர்கள் தான் துறவு நிலைக்குப் போகிறார்கள் என்று சொல்லலாம்! நாம் வாழும்போதே வாழ்வு நலமாக, அமைதியாக, மகிழ்ச்சியாக அமைய வேண்டுமே தவிர, நாம் இறந்தபிறகு துறவானால் என்ன, எதுவானால் என்ன? அவ்வாறு வாழும் பொழுதே வாழ்வு திருப்தியாக, மேன்மையாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அனுபோகத்திலேயும் எல்லை கட்டிக் கொள்ள வேண்டும்; அளவு இட்டுக் கொள்ள வேண்டும்."
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Sunday, January 29, 2017
சாந்தம்
வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.
உலக பொது அருள்நெறி சமய ஆண்டு : 31
ஜனவரி : 27
இன்றைய சிந்தனை :
சாந்தம்:
"நாம் உடலால் வேறுபட்டு இருக்கின்ற போதிலும் உள்ளம் என்ற நிலையால் நமக்கும் தெரியாமலே உலக மக்கள் அனைவரோடும் ஒன்றுபட்டே இருக்கின்றோம். ஆகவே நாம் சிந்தனை செய்யும் போது நமது அறிவின் கூர்மைக்கும் வேகத்திற்கும் ஏற்ப, பல அறிஞர்களோடு ஒன்றுபடுகிறோம். நமது அனுபவத்திற்கு எட்டாத விஷயங்கள் பலவற்றை நாம் அறிந்து கொள்வதே இதற்குச் சான்று.
இதே போன்று நாம் கோபம் அடையும் போது பல முரடர்களோடும் முட்டாள்களோடும் ஒன்றுபடுகிறோம். நாம் விரும்பாத, நாமே வெட்கப்படத்தக்க, நாமே வருந்தத்தக்க சில செயல்களை நாம் கோபத்தின் போது செய்து விடுவதே இதற்குச் சான்று ஆகும்.
நமது கோபத்தை அடக்கிக் கொள்ள நம்மால் முடியவில்லை. எனில் பிறர் மீது எப்படி, ஏன் கோபம் கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டும்.
நாம் சாந்தமாக இருக்கும் போதெல்லாம் நான் கோபத்தை ஒழித்து விடுவேன் என்ற திட சங்கற்பத்தை பல தடவை செய்து கொண்டு விழிப்போடு இருந்தால் முதலில் சில சமயங்களில் தோல்வி அடைந்தாலும் பிறகு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
வருமானம் கிடைக்கும் போது சேமித்து வைக்கும் பணம் தேவையான போது உதவியாவதைப் போல், சாந்தமாக இருக்கும் போது கொள்ளும் உறுதி, கோபம் எழும்போது வாழ்வில் ஒரு புதிய திருப்பம் உண்டாக முன் வந்து நிற்கும்."
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
மாணவர்களுக்கு யோகா கல்வி
📚 மாணவர்களுக்கு யோகா கல்வி
(Yoga education for students) 📚
🌷 *மனிதனும் வாழ்வும்* 🌷
🇮🇳 * இயற்கையின் உச்சகட்ட நிகழ்ச்சி மனிதன்.
* இயற்கைப் பொருட்களையும், சமுதாயத்தோடு இணைந்து ஈட்டிய பல உற்பத்திப் பொருட்களையும், உடல்நலம் காக்கவும் உலக இன்பங்களைத் துய்க்கவும் பயன்படுத்தி வாழ்பவன் மனிதன்.
* பொருளாலும் அறிவாலும் எல்லோரும் இன்பமாக வாழ உதவுபவன் மனிதன்.
*மனிதன் வாழ்வாங்கு வாழ என்ன தேவை....???*
* இயற்கையின் அமைப்பு, இயக்கம், விளைவுகள் பற்றிய அறிவு
* சக மனித குலத்தோடு நட்புநலம் பேணும் அறநெறி அறிவு
* இயற்கை வளங்களைக்கெடுக்காமல் தேவையான பொருட்களை மட்டும் ஈட்டும் தொழிலறிவு
* உடல்நலம் காக்கும் அறிவு
* இன்ப துன்பங்களுக்கான செயல்விளைவு நீதி (Law of nature) அறிவு
* மன நிறைவுக்கு மனம் பற்றிய அறிவு
மேற்கண்ட அறிவுக்கான கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்.
"மூளைத்திறன் (Brain power) மேம்பாட்டுக்கான பயிற்சிகள்"
* இயங்காத மூளை செல்களை இயங்கச்செய்யவும், சிந்தனைத்திறன் ஓங்கவும் தவப்பயிற்சி (தியானம், Meditation) மிகவும் அவசியம்.
* தவத்தில் ஓங்க உயிரோட்டத்தை சீராக வைத்திருக்க உடற்பயிற்சி
* மாணவப் பருவத்தில் பாலுணர்வை ஒழுங்குபடுத்த, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி சீவவித்துக்குழம்பையும்
மூளையில் இருப்பு வைத்து அதை அமுத ரசமாக மாற்றும் காயகல்பப்பயிற்சி
* நல்லதையே எண்ணி நல்லதையே செய்து பழக அறுகுண சீரமைப்பு பண்பாட்டுப் பயிற்சி
*வாழ்க்கையில் வெற்றி என்பது என்ன...???*
இயற்கைத்தத்துவ அறிவிலும், தொழிலறிவிலும், ஒழுக்க பழக்க அறிவிலும் உயர்ந்து அவ்வறிவின் வழியில் வாழ்ந்து உடல்நலம் காத்து, தேவையான பொருட்களை ஈட்டி, மக்கள் உறவில் இனிமைகாத்து, உலக இன்பங்களை அனுபவித்து மனநிறைவு பெறுவதே வாழ்க்கையில் வெற்றி
இவ்வகைக் கல்வி தான் மாணவப் பருவதில் அளிக்கப்பட வேண்டிய யோகா (ஆன்மீக) கல்வி.
கல்வித்துறை அரிஞர்களே...!!! யோகா கல்வி மாணவர்களுக்கு கிடைக்கப்பெற ஆவனசெய்வீர்.....!!! 🇮🇳
🌹 அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி 🌹
வாழ்க வளமுடன், கேள்வி
கேள்வி :
=
அருட்தந்தை அவர்களே, உயிர்ச்சக்தி ஜீவ வித்துக்குழம்பில் உள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் குழந்தைகளுக்கு பருவ வயது வந்தவுடந்தான் வித்துக்குழம்பு உண்டாகும். அதற்குமுன்பு உயிர்ச்சக்தி எங்குள்ளது ? அதேபோல் முதுமை அடைந்ததும் விந்து சக்தி குறைந்துவிடுகிறது ; அப்போது உயிர்ச்சக்தியும் குறைவாக இருக்குமா ?
பதில் :
======
தாய் தந்தை விந்து நாதத்தைக் கொண்டேதான் குழந்தை தன் உடலைக் கட்டிக்கொண்டு வருகிறது. உடல் வளர்ச்சியோடு விந்துவின் அளவும் வளர்ந்துகொண்டே வருகிறது.. 3 வயதிற்குள் மூளையை முழுமையாக கட்டிக்கொள்ளும்.
சுமார் 12 வயது வரை உடலைக்கட்டிக்கொள்வதற்கே விந்து செலவாகும். மீதம் இருக்காது.
உடல் வளர்ச்சிக்கு செலவானது போக எந்த வயதில் விந்து உபரியாக வருகிறதோ அதுதான் பருவமடைதல் (Age Of Maturity) . மேல்மிச்சம் ஏற்படுகிறபோது கழிவு ஏற்படுகிறது.
அப்போதுதான் கீழே அணு அணுவாக முதுகுத்தண்டு வழியாக வந்து சுரப்பியில்(Sexual Gland) தங்குகிறது. அதுவரை அது மூளையிலேயே தங்கி இருக்கும்.
விந்து உற்பத்தி மூளையில் ; தங்குமிடம் கருமையம் என்னும் உடல் மையத்தில்.
விந்து நாதம் இணைந்த முதற்கொண்டு உயிர் பிரியும் வரைக்கும் - குழந்தைகளாக இருந்தாலும் - முதியவர்களாக இருந்தாலும் விந்தானது சீவகாந்த மின் குறுக்கால் (Short Circuit) கொட்டிப்போனால்; அதுதான் மரணம்.
பருவ வயதிற்குள் குழந்தைகள் இறந்தால் மூக்கில், கண்களில், நீர் வரும்.
பெரியவர்களுக்கு பால்சுரப்பியில்(Sexual Gland) மின்குறுக்கு ஏற்படும்; விந்து நாதம் முறிந்து பிறப்புறுப்பு வழியே கொட்டிவிடும்.
எல்லோருக்கும் வாழ்வின் கடைசி வரை விந்து நாதம் இருக்கும். ஏழாவது தாதுவான விந்தின் உற்பத்தி இளம்வயதில் அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு குறைவாக இருக்கும்; ஆனால் உயிரைத்தாங்கும் அளவு இருக்கும்.
வயது முதிர்ச்சியில் விந்துவின் அளவும், அதற்குத்தகுந்தவாறு உயிர்ச்சக்தியின் அளவும் குறையும். அதனால் தான் முதுமையில் பலவீனம் ஏற்படுகிறது, உறுப்புகள் செயலிழக்கின்றன.
-வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் !
""""இந்த நூற்றாண்டு
தந்த மகான் குழு
🌿🌹🌿🌹🌿🌹 """
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.
உலக பொது அருள்நெறி சமய ஆண்டு : 31
ஜனவரி : 26
இன்றைய சிந்தனை :
ஓர் உலக ஆட்சி:
"அரசியல் தலைவர்களாலோ, மதத் தலைவர்களாலோ, பொருள் துறைத்தலைவர்களாலோ உலகில் அமைதி ஏற்படுத்திட முடியாது. ஏனெனில் இவர்கள் தனித்தன்மையில் எவ்வளவு தான் உயர்நோக்கம் உடையவர்களாக இருந்த போதிலும், ஒரு குறிப்பிட்ட வகையில் வாழ்க்கை நலத்தில் எல்லை கட்டி குழுவினர்கள் அளித்துள்ள பதவி, பணம், இவற்றிற்குக் கட்டுப்பட்டவர்கள். ஆகவே ஆன்மீகத் துறையில் உலக மக்கள் அனைவரையும் பொறுப்புடன் இணைத்து நலம் காக்க ஆன்மீக நோக்குடைய ஒரு இயக்கம் தான் நேர்-நிறை உணர்வோடு உலக அமைதிக்கு வழிகாட்ட முடியும்.
நான் கொடுக்கும் திட்டமோ, மிகவும் எளிது; புரிந்து கொள்ளவும் செயல்படுத்தவும் இயல்பானது. ஐக்கிய நாடுகள் சபைக்குப் போதிய அதிகாரமளித்து உலக நாடுகள் ஒன்றிணைந்து உலகிலுள்ள எல்லா ஆட்சி எல்லைகளையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போதுள்ள எல்லைத் தகராறுகளை ஐ.நா. சபை ஏற்படுத்தும் நீதிமன்றத்தின் மூலம் எல்லா நாடுகளும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டமும் செயலும் நாம் கொடுக்கும் திட்டத்தின் சாரமாகும். எல்லைகளின் பாதுகாப்பு ஐ.நா.சபை மூலம் உலகம் ஏற்றுக் கொண்டால் தனித்தனியே எந்நாட்டுக்கும் ராணுவம் தேவைப்படாது.
இன்றுள்ள ராணுவ அமைப்புச் செலவையும், போர் வீரர்களின் சேவையையும், பின்தங்கிய நாடு, பின்தங்கிய மக்கள் இவர்கள் முன்னுக்கு வரவேண்டிய சேவைகளில் ஐ.நா. சபை மூலம் ஈடுபடுத்தி விடலாம். ராணுவத்தின் செலவும் ஆற்றலும் மக்கள் நல சேவைக்குத் திருப்பப்பட்டு விட்டால் 15 ஆண்டுக் காலத்திற்குள்ளாக உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் சமமான பொருளாதார வசதியோடும், அன்பு வளம் பெற்ற உள்ளங்களோடும் அமைதியாக வாழ முடியும்.
உலகெங்கும் ஊர் வாரியாக நகர் வாரியாக, நாடுகள் வாரியாக இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கவும். எந்த பிரிவினருக்கும் இழப்பில்லாத வகையில் உலக அமைதி எற்படத்தக்கவாறு முடிவெடுத்துப் பின்பற்றலாம். இந்த பெருநோக்கச் சேவையாற்ற வாக்கு, பொருள், ஆற்றல் என்ற எவ்வகையாலும் உலகுக்குத் தொண்டு செய்ய வாருங்கள். கூடுங்கள். நலம் செய்து நலம் கண்டு மகிழுங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்."
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.